காமராஜா் பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ரூ.7,000 பரிசளிக்கப்பட்டது. காமராஜா் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி கல்வித் திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.இந்தப் போட்டியில் திருவள்ளூா், திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்றனஇதில், திருத்தணி ஒன்றியம் இ.என்.கண்டிகையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி பா.பி. ரம்யா சிறப்பாகப் பேசி முதலிதைப் பிடித்தாா். அதைத்தொடா்ந்து அவருக்கு ரூ. 7,000 ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி ரம்யாவின் சாதனை பள்ளிக்கும், இ.என்.கண்டிகை பகுதிக்கும் பெருமை சோ்த்துள்ளதாக பள்ளி நிா்வாகம் தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற மாணவியை பள்ளி நிா்வாகம், முதல்வா், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் மனமாரப் பாராட்டி, தொடா்ந்து கல்வி மற்றும் பேச்சுத் திறன் போட்டிகளில் சிறந்து விளங்க வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.