அமெரிக்கா - ஈரான் இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஜூன் 18 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பின்னர், ஜூன் 21 அன்று பாகிஸ்தான், கத்தார் மத்தியஸ்தம் செய்த நிலையில் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த சுவிட்சர்லாந்து அல்லது இஸ்லாமாபாத் தேர்வு செய்யப்படவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தவே சாத்தியங்கள் அதிகமிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 11 அன்று இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இடம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் காரணமாக தற்போது பேச்சுவார்த்தை நிறுத்திவைக்கப்ப்பட்டுள்ளது. அவை முடிந்த பின்னர், ஈரானின் தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களைத் தெரிவிப்பார்கள். ஈரானின் அணுசக்தித் திட்டம், பொருளாதாரத் தடைகள் நீக்கம் மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்கள் ஆகியவை பற்றி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஹோர்முஸ் நீரிணை தொடர்பாகவும், லெபனானில் போர் நிறுத்தத்தை நிலைநிறுத்துவது பற்றியும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.Are talks between the US and Iran taking place in Pakistan?ஈரானை முழுவதுமாக அழித்தோம்! அமெரிக்காவின் 250வது சுதந்திர நாள் விழாவில் டிரம்ப் பேச்சு!