பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் - புகைப்படங்கள்

Wait 5 sec.

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் மதுரை பழமுதிர்சோலை முருகன் கோவியில் இன்று மகா கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 5. 30 மணிக்கு மேல் 6. 30 மணிக்குள் மூலவரான வள்ளி, தெய்வானை உடனுறை சோலைமலை முருகன் கோயில் விமானத்துக்கு குடமுழுக்கு நடைபெற்ற பிறகு, ராஜ கோபுரம் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளின் விமானங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.சிவாச்சார்யார்கள் மந்திரங்கள் ஓத ராஜகோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்று தீபாராதனைகள் காட்டப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டன.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்ட, முருகனின் 6 வது படைவீடான பழமுதிர்சோலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா, வேத மந்திரங்கள் முழுங்க, ராஜகோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டது.ராஜகோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்று தீபாராதனைகள் காட்டப்பட்டது.