பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56700) வரும் 5, 6 ஆம் தேதிகளில் ஆடுதுறை - மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - ஆடுதுறை இடையே மட்டும் இயங்கும்.இதேபோல மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 5, 6 ஆம் தேதிகளில் மயிலாடுதுறை - ஆடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ஆடுதுறை - செங்கோட்டை இடையே மட்டும் இயங்கும்.