கொட்டாவி வருவதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம். அதனால், நன்கு மூச்சை இழுத்து விடுங்கள். கொட்டாவியைப் போய் நன்கு சுறுசுறுப்பாக விடுவீர்கள்.ஜாதிக்காயை தண்ணீர்விட்டு அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.சுக்கைத் தட்டி அதை கஷாயமாகப் போட்டு, தேனும் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.சமையல் செய்யும்போது கையில் சூடுபட்டால், பீட்ரூட்டைப் பிழிந்து, அதன் சாறை எடுத்துத் தடவுங்கள்.நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் தலைபாரம் நின்றுவிடும்.