வெயிலுக்கான நீர் மோரில் பச்சை மிளகாய்க்குப் பதில் சிறிதளவு சுக்கு சேர்த்தால், சுவை கூடும்.குக்கரில் பருப்பு வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைச் சேர்க்கவும். வழக்கம்போல சாம்பார், ரசம் என்று எது வேண்டுமானாலும் செய்யலாம். வெந்தயம் வாயுவை முறியடிக்கும்.ரசப் பொடி என்று தனியாகத் தயாரிக்காமல் மிளகு, சீரகத்தை வாணலியில் வறுத்துப் பொடி செய்தால், தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.அரிசி மாவு, கோதுமை மாவு வைத்துள்ள பாட்டில்களில் பட்டை, இலை ஒன்றைப் போட்டு வைத்தால், மாவுகளில் ஈரம் பூக்காமல் இருக்கும்.