ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா கடந்த 3 ஆம் தேதி யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. இரண்டாவது நாளில் 108 கலச திருமஞ்சனம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை புனிதக் கலச நீரால் ஸ்ரீநிவாச பெருமாள், துணை சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீநிவாச பெருமாள்.சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீநிவாச பெருமாள்.