சர்வதேச பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா 125-வது இடம்பிடித்துள்ளது.சர்வதேச பாஸ்போர்ட் குறியீடு தரவரிசையில் கடந்தாண்டைவிட ஒரு இரம் சரிந்து 125-வது இடம்பிடித்துள்ளது இந்தியா. நமீபியா 124-வது இடத்திலும், அஜர்பைஜான் 126-வது இடத்திலும் உள்ளன. 197 நாடுகளின் பாஸ்போர்ட் குறியீடு தரவரிசைப்படுத்தப்பட்ட இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 9 ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச பாஸ்போர்ட் குறியீடு என்பது மேம்படுத்தப்பட்ட பயணச் சுதந்திரம், முதலீடு மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட்டும் மதிப்பிடப்படுகின்றது. இதில், முதல் 20 இடங்களுக்குள் நுழைந்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் மட்டுமே. பல நாடுகளின் பாஸ்போர்ட் தரவரிசை மதிப்பீடுகள் முக்கியமாக விசா இல்லாத பயணத்தையே அளவுகோலாக வைத்துள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா சென்ற ஆண்டைவிட ஒரு இடம் கீழிறங்கி 125-வது இடத்தில் உள்ளது. இந்தத் தரவரிசைப் பட்டியல் முதலில் வெளியான 2021-ம் ஆண்டில் 127-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது முன்னேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பூட்டான், ஜமைக்கா, மக்காவ், நேபாளம், பாலஸ்தீனம், துனிசியா, அங்கோலா மற்றும் பார்படாஸ் போன்ற நாடுகளுக்கு விசா இல்லாமலும் அல்லது அங்கு சென்று ‘அரைவல் விசா’-வும் எடுத்துக் கொண்டு பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, அண்டோரா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சுமார் 88 நாடுகளுக்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவைப்படுகிறது.ஆசிய நாடுகளில் சிறந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியா இடம்பெற்றுள்ளன. முதல் 5 இடங்களில் கூட இந்தியா இடம்பெறவில்லை. ஆசிய நாடுகள் தரவரிசையில் இந்தியா 29-வது இடத்தில் உள்ளது.மொத்த தரவரிசையில், பாகிஸ்தான் 188-வது இடத்திலும், வங்கதேசம் 166-வது இடத்திலும், இலங்கை 141-வது இடத்திலும், நேபாளம் 164-வது இடத்திலும், பூட்டான் 132-வது இடத்திலும், சீனா 104-வது இடத்திலும் உள்ளன.பாஸ்போர்ட் குறியீடு தரவரிசை பயண சுதந்திரத்தின் அடிப்படையில் மட்டுமின்றி வாழ்க்கைத் தரம் (50%), முதலீடு (25%) மற்றும் வாழ்க்கைத்தரம் (25%) போன்ற மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ், 14 தனித்தனி குறியீடுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. 'வாழ்க்கைத்தரக் குறியீட்டில்' இந்திய பாஸ்போர்ட் 118-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 11 இடங்கள் முன்னேறியதைக் குறிப்பிடுகின்றது. 'முதலீட்டுக் குறியீட்டில்' இந்தியா 94-வது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக 97-வது இடத்திலிருந்து 3 இடங்கள் முன்னேறியுள்ளது.Global Passport Index: India ranked 125th16 நாள்களைக் கடந்த சிஜேபி உண்ணாவிரதப் போராட்டம்!