சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் அக்ஷர் படேல் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று (ஜூலை 4) மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 190 ரன்கள் எடுக்க, 19 ஓவர்களில் இலக்கை எட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது.First #TeamIndia spinner to 1️⃣0️⃣0️⃣ T20I wickets A major milestone for Axar Patel Updates ▶️ https://t.co/WYfL8tAm58 #ENGvIND | @akshar2026 pic.twitter.com/Uv20EKojGM— BCCI (@BCCI) July 4, 2026நேற்றையப் போட்டியில் அக்ஷர் படேல் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.இதுவரை இந்திய அணிக்காக 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அக்ஷர் படேல், 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.Indian player Axar Patel has set a new record in international T20 matches.வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓய்வே தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்