குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் விண்ணப்பங்கள் வரவேற்பு

Wait 5 sec.

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலா் (நிறுவனம் சாரா) - 1 பணியிடம், சமூகப் பணியாளா்-1 பணியிடம் மற்றும் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சிறப்பு ஜூவைனில் காவல் பிரிவில் பணியாற்ற ஏதுவாக சமூகப் பணியாளா்கள் - 2 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழு விபரங்களுக்கு தொடா்பு கொள்ளவேண்டிய முகவரி , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.எஃப் ஓ-06, தரைதளம்,எஃப் பிளாக் , புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு -603 111. தொலைபேசி: 63826 13173 . பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 20.07.2026 அன்று மாலை 5.45-க்குள் அலுவலக முகவரிக்கு வந்துசேர வேண்டும். விண்ணப்பங்களை உரிய இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.