தாய்மை குறித்து பிரபல மலையாள நடிகை பார்வதி திருவோத்து பேசியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. நடிகர் பிருத்வி ராஜ், நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ள 'ஐ, நோபடி' (I, Nobody) திரைப்படம் வருகிற ஜூலை 9 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கான புரொமோஷன் தொடர்பாக பிரபல மலையாள இதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில் நடிகை பார்வதி, தாய்மை குறித்துப் பேசியுள்ளார். 'தாயாக இல்லாமல் இருப்பதே என்னுடைய தாய்மை' என்று கூறியுள்ளார். "எனக்கு திருமணமும் ஆகவில்லை, குழந்தையும் இல்லை. ஒரு தரப்பினர் குழந்தையைப் பெற்று மிகவும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள். பெண்களும் உடலளவில் பெரிய அளவில் மாற்றங்களை எத்ரிகொள்கின்றனர். அதேநேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதும் சிறந்த தாய்மைதான். ஏனென்றால் என்னால் என்ன முடியும் என்பது எனக்குத் தெரியும். மற்றவர்களுடன் எவ்வளவு நேரம் செலவழிக்க முடியும் என்பதும் தெரியும். இது என்னுடைய சிறந்த முடிவாக நினைக்கிறேன். எதிர்காலத்தில் வாய்ப்புகள் கிடைத்தால் நான் அதுபற்றி முடிவெடுக்கலாம். நான் என்னை மாற்றிக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். தனிப்பட்ட உறவு, குழந்தைகள் மீது எனக்கு பெரிதாக விருப்பம் இல்லை. ஒருவருக்கு குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான மனநிலை எனக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. 17-வது வயதில் எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்தேன். அந்த கற்பனையிலும் இருந்தேன். ஆனால் வயது ஆகஆக ஏற்பட்ட முதிர்ச்சியும் அனுபவங்களும் என்னுடைய முடிவை மாற்றின. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது குறித்த பார்வையை மாற்றிவிட்டது" என்று கூறியுள்ளார். குழந்தை பெற்றுக்கொள்வதை ஒரு கடமையாக நினைக்காமல் அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறியுள்ளார். இதுபற்றி இணையத்தில் பலரும் விவாதித்து வருகின்றனர். Actress Parvathy shares her thoughts on motherhood and childசாப்பிட்டவுடன் நடக்கலாமா? உடல் எடையைக் குறைக்க உதவுமா?