தமிழ்நாட்டில் மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்களுக்கு ரீடிங் எடுக்க புதிய மொபைல் போன் வாங்க ரூ. 10,000 வழங்கப்பட உள்ளது.தமிழ்நாட்டில் வீடு, வணிக நிறுவனங்களில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் துல்லியமாக மீட்டர் ரீடிங் எடுக்க மொபைல் போன் செயலியைப் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஊழியர்களின் பணியை எளிதாக்கவும், டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும் ஊழியர்கள் புதிய மொபைல் போன், சிம் கார்டு வாங்குவதற்காக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் ரூ. 10,000 வழங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் ஊழியர்களுக்கு தங்குதடையற்ற இணைய சேவை மற்றும் அழைப்பு வசதிக்காக போஸ்ட் பெய்ட் சியுஜி சிம் கார்டுகளும் வழங்கப்பட உள்ளன.இதன் மூலம் மீட்டர் ரீடிங் எடுக்கும் பணிகளில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, நுகர்வோரின் மின் பயன்பாட்டு விவரங்களை உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்யவும் வழிவகை ஏற்படுத்தப்படும்.இருப்பினும், இந்தத் தொகையானது ஊழியர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட மாட்டாது என்றும், ஒருமுறை பெற்றுக் கொண்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த வசதியைப் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.சொல்லப் போனால்... ஜென் ஸீக்களும் பூமர்களும்!TANGEDCO announces Rs 10,000 allowance for meter readers to purchase Mobile phones and Sim cards