கனடாவை வீழ்த்தி முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது மொராக்கோ!

Wait 5 sec.

கால்பந்து உலகக் கோப்பையில் மொராக்கோ அணி கனடாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.கடந்த உலகக் கோப்பையில் மொராகோ அணி அரையிறுதி வரைக்கும் சென்றது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க நாடான மொராகோ கால்பந்து உலகில் தனக்கென்று தனியான அந்தஸ்தை உருவாக்கி வருகிறது. அமெரிக்காவின் ஹூஸ்டன் திடலில் நடைபெற்ற போட்டியில் அசெடின் ஒனாஹி 50, 82ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். சுபியான் ரஹிமி 90+8ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 3-0 என மொராக்கோவை வெற்றிபெற செய்தார்கள். இந்தப் போட்டியில் 50 சதவிகித பந்தை மொராக்கோவும் 37 சதவிகிதத்தை கனடாவும் இரு அணிகளுக்கும் இடையே மிகுந்த போட்டியாகவும் இருந்தது. கனடா அணி இலக்கை நோக்கி அடித்த 5 கோல்களையும் மொராக்கோ கோல்கீப்பர் தடுத்து அசத்தினார். இரு அணி வீரர்களுக்கும் தலா 4 ’யெல்லோ கார்டு’கள் அளிக்கப்பட்டன. மொராக்கோ அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த அணி காலிறுதியில் பராகுவே - பிரான்ஸ் இதில் வெல்லும் அணியுடன் மோதவிருக்கிறது.இஸ்மாயில் சைபாரி காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து 22ஆவது நிமிஷம் வெளியேறினார். கேப் வெர்டேவின் பெருமை... மெஸ்ஸியுடனான சந்திப்பு குறித்து கோல்கீப்பர் நெகிழ்ச்சி! Morocco beats World Cup co-host Canada 3-0 and advances to the quarterfinals