திமுகதான் குதிரை பேரத்தை முதன்முதலில் உருவாக்கியதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.தவெகவில் குதிரை பேரம் செய்யப்படுவதாக திமுக, அதிமுக, பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.ஈரோட்டில் தவெக மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துப் பேசியதாவது, குதிரை பேரத்தை உருவாக்கியதே திமுகதான். அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மதிமுகவை சேர்ந்த ராமகிருஷ்ணனை ராஜிநாமா செய்யவைத்து, திமுகவில் இணைத்து, மீண்டும் அவர் திமுகவில் போட்டியிட வாய்ப்பளித்தனர். அனிதா ராதாகிருஷ்ணனும் அதிமுகவை சேர்ந்தவர்தான்.குதிரை பேரத்தை முதன்முதலில் உருவாக்கிய நிலை திமுகவுக்குத்தான் இருக்கிறது. எங்களுக்கு குதிரை பேரம் பேசவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், நாங்கள் (தவெக) வலிமையாக ஆட்சியமைத்திருக்கிறோம்.96 பேரை வைத்திருக்கும் மைனாரிட்டிக்குத்தான் (திமுக) குதிரை பேரம் தேவை; எங்களுக்குத் தேவையில்லை என்று தெரிவித்தார்.மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!Horse-trading was first initiated by the DMK, says Minister KA Sengottaiyan