இதயம் முரளி என் வாழ்க்கையில் நெருக்கமான திரைப்படம்: ப்ரீத்தி முகுந்தன்

Wait 5 sec.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் இதயம் முரளி திரைப்படத்தில் தன் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த திரைப்படமான இதயம் முரளி திரைப்படம் வருகிற ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில், நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். கல்லூரி கால காதல், பள்ளியிலிருந்தே தொடரும் நட்பு என இன்றைய இளைஞர்களுக்கான கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் தமன் இசையமைத்த பாடல்களும் கவனம் பெற்றிருந்த நிலையில், அண்மையில் வெளியான டிரைலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்தது. இந்த நிலையில், இதயம் முரளி புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன், “இதயம் முரளி திரைப்படத்தில் ஒப்பந்தமானபோது இவ்வளவு சிறப்பான படமாக வரும் என நினைக்கவில்லை. இது என் வாழ்க்கையின் மிக நெருக்கமான திரைப்படம். இந்தக் கதாபாத்திரத்தில் இரண்டு திருப்பங்கள் இருக்கின்றன. அது உங்களுக்கெல்லாம் பிடிக்கும். அதற்கு, இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நன்றி. இப்போது மேடையில் நிற்கும் போது என் இதயம் படபடவென அடிக்கிறது. நீங்கள் (ரசிகர்கள்) எனக்கு கொடுக்கும் ஆதரவுக்கு பெரிய நன்றி” எனத் தெரிவித்துள்ளார். நடிகை கயாடு லோஹர் நேஷனல் கிரஷ் ஆவார்: அட்லிActress Preethi Mukundhan has spoken about her character in the film Idhayam Murali