யோகாசனப் பயிற்சியால் தன்னை லேசாக உணர்வதாக நடிகை கனிகா தெரிவித்துள்ளார். ஈஷா யோகா மையத்தில் யோகா வகுப்புக்குச் சென்றுள்ள அவர், யோகாவால் தனது உடல் மற்றும் மனநிலையில் நடந்த மாற்றங்கள் குறித்து விளக்கியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில்விடியோ வெளியிட்டு நடிகை கனிகா பேசியதாவது:''இன்று எனது 7 வது நாள். தொடர்ந்து 7 நாள்கள் யோகா வகுப்பை முடித்துள்ளேன். ஆரம்பத்தில் எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் வந்தேன். என்னுடைய மேம்பட்ட வடிவத்தை அடைவதுதான் என்னுடைய இலக்காக இருந்தது. இந்த யோகா மையம் குறித்து நிறைய கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், எனக்கு இப்போதுதான் நேரம் அமைந்தது. இன்றைய இறுதி நாளில் என்னை நான் அடையாளம் கண்டுள்ளேன். லேசாக இருப்பதைப்போல உணர்கிறேன். இன்று அமைதியாக உணர்கிறேன். என்னுடன் நான் இரண்டரக் கலந்துவிட்டதைப்போல உணர்கிறேன். புத்துணர்ச்சியாக இருக்கிறேன். நமது பொறுப்புக்கு எல்லையில்லை. ஒவ்வொரு நாளும் நான் எழும்போது நமக்கு ஒரு பொறுப்பு உள்ளதை உணர்கிறேன். என் மகனையும், என் குடும்பத்தையும் இங்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு ஒரு புதிய வழி கிடைத்துள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார். View this post on Instagram My new path I discover myself through yoga Actress Kanika