புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு நாட்டின் தூதர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தங்களுடைய நற்சான்றிதழ்களை திங்கள்கிழமை (ஜூலை 6) சமர்ப்பித்தனர்.மங்கோலியா, மொசாம்பிக், நிக்கராகுவா, சுரினாம், கேபான், மற்றும் பகாமாஸ் ஆகிய ஆறு நாட்டின் தூதர்களிடமிருந்து இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டார்.நற்சான்றிதழ்கள் என்பது ஒரு நாட்டின் தூதர் மற்றொரு நாட்டில் தனது அதிகாரபூர்வ பணியைத் தொடங்குவதற்கு முன்னர், தனது நாட்டின் தலைவரிடமிருந்து சான்றிதழ் பெற்று அதனை தான் பணி செய்யப்போகும் நாட்டின் தலைவரிடம் சமர்ப்பிக்கும் முறையாகும். ஏற்கெனவே, பதவி வகித்து வந்த தூதரின் பதவிக்காலம் முடிந்த பிறகு அந்தந்த நாடுகள் புதிய தூதரை நியமிக்கும். புதிய தூதர் பொறுப்பேற்கும் நாட்டுக்கு வந்ததும், அந்நாட்டின் குடியரசுத் தலைவரை (ராஷ்டிரபதி பவனில்) நேரில் சந்தித்து இக்கடிதத்தை முறைப்படி வழங்குவார்.இதன்மூலம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அந்தத் தூதர் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முழுத்தகுதி உடையவர் என்பது உறுதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.President Droupadi Murmu received credentials from Dr. Ulziit Luvsanjav, Ambassador of Mongolia; and Mr. Peter Nicholas Symonette, High Commissioner of the Commonwealth of The Bahamas, at Rashtrapati Bhavan. pic.twitter.com/hU2Zy0glUR— President of India (@rashtrapatibhvn) July 6, 2026President Droupadi Murmu received credentials from Mr. Armando Pedro Muiuane Junior, High Commissioner of the Republic of Mozambique; Ms. Nadeska Imara Cuthbert Carlson, Ambassador of the Republic of Nicaragua; Mrs. Hanisha Jairam, Ambassador of the Republic of Suriname; and Mr.… pic.twitter.com/3lRCnRDDzD— President of India (@rashtrapatibhvn) July 6, 2026இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்!Ambassadors from six countries presented their credentials to President Droupadi Murmu on Monday (July 6).