வாட்ஸ் ஆப் செயலில் ஆன்லைனில் இருந்தால் இனி எளிதாக மற்றவர்கள் தெரிந்துகொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களால் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் பயனர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது வாட்ஸ்ஆப்பிலும் புதுப்புது அப்டேட் வந்து கொண்டிருக்கிறது.அந்த வகையில் சமீபத்தில் 'யூசர் நேம்' (User name) எனும் பயனாளர் பெயர் இடம்பெறும் புதிய வசதி அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாக, வாட்ஸ்ஆப்பில் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என இனி எளிதாக தெரிந்துகொள்ள முடியும். முன்னதாக ஒருவரது தொடர்பை / எண்ணை கிளிக் செய்து உள்ளே சென்று பார்த்தால்தான் அவர் ஆன்லைனில் இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியும். ஆனால் இனி வாட்ஸ்ஆப் முகப்பு பக்கத்திலேயே அதை தெரிந்துகொள்ள முடியும். பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஆன்லைனில் இருந்தால் மற்றவர்களுக்குத் தெரியும்படி, நமது ப்ரொபைல் புகைப்படத்தின் பக்கத்தில் ஒரு பச்சை நிற புள்ளி (Green dot) ஒளிரும்.அதேபோல இனி வாட்ஸ்ஆப்பிலும் ஆன்லைனில் இருந்தால் நம் ப்ரொபைல் மீது பச்சை நிற டாட் தெரியும். இதன் மூலமாக அவர்கள் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். நாம் ஆன்லைனில் இருந்தாலும் மற்றவர்களுக்கும் காட்டும். ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு தற்போது பரிசோதனையில் இருக்கும் இந்த புதிய வசதி, ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஆனால்.... இதைத் தவிர்ப்பது எப்படி?வாட்ஸ்ஆப் செயலில் ஆன்லைனில் இருந்தாலும் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாட்ஸ்ஆப்பில் ஏற்கெனவே ஒரு 'ஆப்ஷன்' உள்ளது. அதன்படி 'privacy' செட்டிங்க்ஸில் 'Last seen and online' என்பதை கிளிக் செய்து அதில் 'Nobody' என்பதை செலக்ட் செய்தால் நீங்கள் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது. அதேபோல மற்றவர்கள் ஆன்லைனில் இருந்தாலும் உங்களுக்குத் தெரியாது. இந்த ஆப்ஷனை கிளிக் செய்பவர்களுக்கு 'க்ரீன் டாட்' தெரியாது என்றும் கூறப்படுகிறது. WhatsApp launched the green dot for online contacts on Androidகுழந்தை பெற்றுக்கொள்வது என்பது...! தாய்மை பற்றி நடிகை பார்வதி கருத்து