வெங்கட் பிரபு கதை எழுதி, யுவன் இசையில் உருவாகும் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு வெங்கட் பிரபு கதை எழுதியுள்ளார். யுவன் இசையமைக்கிறார்.குடும்பஸ்தன் படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்குநராக அறிமுகமாகிறார். எலிஃபேண்டைன் நிறுவனத்தின் சார்பில் ரமணன் பாலகங்காதரன் இப்படத்தை தயாரிக்கிறார்.இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக களமிறங்கும் இப்படத்தின் பாடல்களை இயக்குனர் சுஜித், விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் நவயுகன் ஆகியோர் எழுதியுள்ளனர். பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இளையராஜாவின் 50வது ஆண்டு விழா இசை நிகழ்ச்சியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இளையராஜா குடும்பத்தின் 3 வாரிசுகளின் பங்களிப்பில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.Story by Venkat Prabhu, music by Yuvan: 'Raja's Playlist' movie announced!சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் இணைந்த ராஜ் பி. ஷெட்டி!