மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தில் உண்ணாவிரதம் உள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுகின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது.நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாட்டின் பல்வேறு நகரங்களில் தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் லடாக்கைச் சேர்ந்த் ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்றதோடு உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்.8 ஆவது நாநாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவருடைய உடல்நிலை மோசமாகி 6 கிலோ எடையை சோனம் வாங்சுக் இழந்துள்ளதாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இந்த நிலையில், இவர்களின் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவளித்து வருகின்றனர். இருப்பினும் அரசு சார்பில் இந்தப் போராட்டம் குறித்து எந்த நிலைப்பாடும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜிநாமா தொடரும்! - பாஜகThe health of social activist Sonam Wangchuk, who is on a hunger strike as part of the protest organized by the 'Cockroach Janata Party' demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan, continues to deteriorate.