கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடிப்பவர்களுக்கு வழங்கப்படும் தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருதுக்கான போட்டியில், பிரான்ஸ் வீரர் கிளியன் எம்பாபே தன்னை நிலைநிறுத்திக்கொண்டே இருக்கிறார்.தங்கக் காலணிக்கான போட்டியில் ஆர்ஜென்டீன வீரர் லியோனல் மெஸ்ஸி உடன் 7 கோல்கள் அடித்து எம்பாபேவும் சமன்செய்துள்ளார். ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பராகுவே அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பில் 70ஆவது நிமிஷத்தில் கிளியன் எம்பாபே கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் மெஸ்ஸியுடன் சமன்செய்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸி 20 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். எம்பாபே 19 கோல்களுடன் இரண்டாமிடத்தில் தொடர்கிறார். இதுவரை, உலகக் கோப்பையில் 19 முறை பங்கேற்றுள்ள எம்பாபே 19 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். கடந்த உலகக் கோப்பையில் 8 கோல்கள் அடித்த எம்பாபே தங்கக் காலணி விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் தேஷாம்ஸ் கூறியிருப்பதாவது: எம்பாபேவிடம் கோல் அடிப்பதற்கான ஆர்வம் இருக்கிறது என்பதை முதல் நாளிலிருந்து கூறிவருகிறேன். தடகள வீரருக்கான அனைத்து முயற்சிகளையும் அவர் செய்கிறார். களத்தில் தலைசிறந்த வீரராக இருக்கும் அவர் பேசும்போது அணியில் இருக்கும் அனைவருக்காகப் பேசுகிறார் என்றார்.பராகுவே - பிரான்ஸ் ஆட்டத்தில் வீரர்கள் மோதல்: பெனால்டியில் கோல் அடித்த எம்பாபே! Kylian Mbappe of France scores 19th career World Cup goal, 1 behind Golden Boot rival Messi