நடிகர், இயக்குநராக இருக்கும் பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய போஸ்டரினால் சமூக வலைதளமே அது என்னவாக இருக்குமென்ற எதிர்பார்ப்பில் மூழ்கியுள்ளன. பிஸியாக நடித்துவரும் பிரதீப் ரங்கநாதன் அடுத்தாக தயாரிப்பாளராகவும் களமிறங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கோமாளி படத்தின் மூலம இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தின் மூலம் நடிகராகவும் புகழ்பெற்றார். அடுத்தடுத்து வெளியான டிராகன், டியூட் ஆகிய படங்கள் ஹிட் அடித்ததால் தற்போது முன்னணி நடிகராக மாறியுள்ளார். அடுத்ததாக, படம் நடிப்பாரா இயக்குவாரா அல்லது தயாரிப்பாளராக களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பை கிளப்பும்படி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். பிரதீப் வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில், “அடுத்த அலை ஜூலை 6, காலை 10 மணி” எனப் பதிவிட்டுள்ளார். பெரும்பாலானோர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கலாம் எனக் கூறிவருகிறார்கள். pic.twitter.com/YdYFDTfu8D— Pradeep Ranganathan (@pradeeponelife) July 5, 2026ஜன நாயகன் வெளியீட்டால் தள்ளிச்செல்லும் திரைப்படங்கள்!Pradeep Ranganathan's next avatar! Is he starting a production company?