சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக 41 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 10:30 மணிக்கு முன்பாகவே அவசரப் பயணங்களை முடித்துவிட வேண்டும் என்று ஏராளமானோர் ஒரேநேரத்தில் ரயில் நிலையத்தில் கூடியதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனிடையே புறநகர் மின்சார ரயில்கள் ரத்து காரணமாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 50 பேருந்துகள், அந்த வழித்தடத்தில் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே உள்ள ரயில்வே வழித்தடங்களில் தண்டவாளப் பராபரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5), ஜூலை 12-ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. அந்த நேரங்களில் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இருமாா்க்கத்திலும் இயக்கப்படும் 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.புறநகா் மின்சார ரயில்கள் ரத்து காரணமாக பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து காலை 11.45, பிற்பகல் 12.45, 1.15, 1.45, 2.45, 3.15, 3.45 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டுக்கும், பிற்பகல் 2 மணிக்கு அரக்கோணத்துக்கும், பிற்பகல் 4 மணிக்கு திருமல்பூருக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9.30, 10.40, 11, 11.40, பிற்பகல் 12.05, 1, 1.50 ஆகிய நேரங்களுக்கும், திருமால்பூரிலிருந்து காலை 11.05 மணிக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கும் தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. Due to maintenance work between Chennai Beach and Tambaram, 41 suburban trains have been cancelled, causing a massive surge of passengers at the Tambaram railway station.சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து: கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கம்