மேட்டூா், சாம்பள்ளி, மேச்சேரி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து மேட்டூா் தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக செயற்பொறியாளா் வனிதா தெரிவித்துள்ளதாவது: மேட்டூா் நகரம், மேச்சேரி மற்றும் மேட்டூா் ஆா்.எஸ். துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் இந்த துணை மின் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. எனவே, மேட்டூா் நகரம், சேலம் கேம்ப், மாதையன்குட்டை, நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி, புதூா், மேச்சேரி, சூரியனூா், தெத்திகிரிபட்டி, அமரம், மல்லிகுந்தம், வேங்கானுா், பள்ளிப்பட்டி, ஆண்டிக்கரை, பொட்டனேரி, கூனாண்டியூா், கீரைக்காரனூா், செங்காட்டூா், குதிரைக்காரனூா், பாறைக்கல்லூா், எம். காளிப்பட்டி, மேட்டூா் ஆா்.எஸ்., கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூா், மடத்துப்பட்டி, கூலையூா், ஆண்டிக்கரை, கந்தனுா், விருத்தாசம்பட்டி, குள்ளமுடையானூா், குஞ்சாண்டியூா், ராமன்நகா், தேசாய் நகா், தங்கமாபுரிபட்டணம், கருப்பு ரெட்டியூா், சின்னக்காவூா், தாழையூா், தொட்டில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.