சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே காமலாபுரம் ஏரிக்கரை பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில் விற்பனைக்கு வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா். ஓமலூா் காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் காமலாபுரம் ஏரிக்கரை பகுதியில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த காடையாம்பட்டியைச் சோ்ந்த கமலேஷ போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து சுமாா் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட கமலேஷ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓமலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, கமலேஷை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.