கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறலாம் என்று அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஞாயிற்றுக்கிழமை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, "இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பெரும்பாலும் மிக விரைவில் நடக்க வாய்ப்புள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக முழு அமைச்சரவையும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் தற்போதைய நிலையில், சுமார் 20 துறைகளை முதல்வர் டி.கே. சிவகுமார் கூடுதலாகக் கவனித்து வருகிறார். எனவே, இது விரைவில் நடக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.கர்நாடகத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு அமைந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் 2 ஆவது முதல்வராக டி.கே. சிவகுமார் கடந்த ஜூன் மாதம் பதவியேற்றுக் கொண்டார். இருப்பினும், ஆட்சி அமைத்து ஒரு மாத காலத்தை நிறைவு செய்த முதல்வர் டி.கே. சிவகுமாரின் அமைச்சரவை இதுவரை நிரப்பப்படவில்லை.அமைச்சரவையில் தற்போது முதல்வருடன் சேர்த்து 14 பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். ஆனால், மாநிலத்தில் அதிகபட்சமாக 34 அமைச்சர்கள் வரை இருக்க முடியும். இதனால் அமைச்சரவை எந்த நேரத்திலும் நிரப்பப்படலாம் என்பதால் அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்காக எம்.எல்.ஏ-க்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதிலும் எம்எல்ஏக்கள் சிலர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த அண்மையில் தில்லிக்குச் சென்றதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Karnataka Minister Ramalinga Reddy on Sunday hinted that the Cabinet expansion may take place soon.மும்பையில் கனமழை: முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகனம் முன் விழுந்த மரம்!