சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் இணைந்த ராஜ் பி. ஷெட்டி!

Wait 5 sec.

பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் இணைந்தது தமிழ் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்துள்ளார். கமல்ஹாசன் தயாரிக்கும் சேயோன் படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்கி வருகிறார். தாய்கிழவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு இரண்டாவது படமே பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மதுரை வாழ்வியல் சார்ந்த படமாக உருவாகிறது.முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன.சேயோன் படத்தை அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், ராஜ் பி. ஷெட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, சேயோன் படத்தில் இணைந்ததுக்கு படக்குழு நன்றி கூறியுள்ளது. இயக்குநராக ராஜ் பி. ஷெட்டி கருட கமனா விருஷப வாகன படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்றார். அவர் கடைசியாக இயக்கிய சுவாதி முத்தின மழ ஹனியே என்ற படமும் மிகவும் வரவேற்பைப் பெற்றது. The cast gets StrongerThe celebration gets BiggerHappy Birthday, @RajbShettyOMK and Welcome aboard#HappyBirthdayRajbshetty #Rajbshetty#சேயோன் #Seyon #KamalHaasan #Sivakarthikeyan @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Dir_SivakumarM @Music_Santhosh@RKFI… pic.twitter.com/iEpsTv9dhJ— Raaj Kamal Films International (@RKFI) July 5, 2026தெலுங்கு சினிமாவில் முதல்முறை... ரூ.100 கோடி வசூலை நோக்கி சமந்தாவின் எங்கள் தங்கம்!Kannada actor Raj B Shetty joins sivakarthikeyan Seyon