மகாராஷ்டிரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் பலியாகியுள்ளதாக அமைச்சர் கிரீஷ் மகாஜன் தெரிவித்தார். மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மகாராஷ்டிர சட்ட மேலவை திங்கள்கிழமை அன்றைய தினத்திற்கான நடவடிக்கைகளை ஒத்திவைத்தது. மேலவை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னதாக, பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் பேசுகையில், மும்பை மற்றும் அண்டை மாவட்டங்களான பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய இடங்களில் சாதனை அளவிலான மழை பதிவாகியுள்ளது. கடந்த மூன்று முதல் நான்கு நாட்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் பலியாகியுள்ளனர். அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது என்றார்.ஞாயிற்றுக்கிழமை மும்பையின் மன்குர்ட் பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர்.கடந்த இரண்டு நாட்களில் மும்பையில் மரம் விழுந்த சம்பவங்களில் இருவர் பலியாகினர். ஜூன் 30ஆம் தேதி பள்ளிப் பேருந்தின் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் ஒருவன் பலியானான் என்பது குறிப்பிடத்தக்கது.The Maharashtra legislative council was adjourned for the day on Monday in view of the heavy rainfall in Mumbai and neighbouring areas.உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலி