தெலுங்கு சினிமாவில் முதல்முறை... ரூ.100 கோடி வசூலை நோக்கி சமந்தாவின் எங்கள் தங்கம்!

Wait 5 sec.

நடிகை சமந்தாவின் எங்கள் தங்கம் (தெலுகில் மா இன்டி பங்காரம்) திரைப்படம் ரூ.92 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் அறிமுகமானார். பின்னர், விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றார். தற்போது ஹிந்தி, தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தனது தயாரிப்பு நிறுவனமான டரராலா பிக்சர்ஸ் சார்பில் மா இண்டி பங்காரம் என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். சமந்தாவின் கணவர் எழுதிய இந்தப் படத்தினை பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த ஜூன் 19ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மூன்று வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.92 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு நேற்றிரவு போஸ்டர் வெளியிட்டிருந்தது. அந்த போஸ்டரில், தெலுங்கு சினிமா வரலாற்றில் பெண் நாயகி படங்களில் அதிகம் வசூலித்து, முதலிடத்தைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. View this post on Instagram பிரதீப் ரங்கநாதனின் அடுத்த அவதாரம்..! தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறாரா? A first in Telugu cinema... Samantha's 'Engal Thangam' aka Maa Inti Bangaaram heading towards the ₹100 crore mark!