பன்னீர்செல்வம் இயக்கத்தில் ரேனிகுண்டா 2 படத்தின் டீசர் வெளியானது. படத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு மற்றும் ஷாமி திலகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ரேனிகுண்டா படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த கேரளாவைச் சேர்ந்த சனுஷா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். படத்தில் முதல் பாகத்தின் நடித்த கதாபாத்திரங்களில் சிலர் இதிலும் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதற்கிடையில் ரேனிகுண்டா - 2 திரைப்படத்தின் டீசரை முன்னணி இயக்குநர்களான நெல்சன், லிங்குசாமி, வெங்கட் பிரபு மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.