மோசடி அழைப்புகளை அடையாளம் காட்டும் போன் பை கூகுள் பற்றித் தெரியுமா?

Wait 5 sec.

நமக்கு வரும் மோசடி அழைப்புகளை போன் பை கூகுள் (Phone by Google) செயலி மூலம் அடையாளம் காட்டும் வசதி அறுமுகமாக உள்ளது.ஒருபுறம் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய, மறுபுறம் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகி வருகின்றன. அதேவேளையில், செய்யறிவை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.இந்த நிலையில், செய்யறிவைப் பயன்படுத்தி மற்றவர்களின் குரல்களை அதேமாதிரி உருவாக்கி அவர்கள் பேசுவது போலவே பேசி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியவர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடி செயல்கள் பெருகிக் கொண்டே வருகின்றன.இதைத் தடுக்கும் வகையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது கூகுள் நிறுவனம். அதன்படி, நமக்கு வரும் அழைப்பின் பின்னணியை தானாகவே சரிபார்த்து அது மோசடி அழைப்பாக இருந்தால் அந்த அழைப்பை எடுக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையை போன் பை கூகுள் செயலி விடுக்கும்.ஆண்ட்ராய்டு 12 மற்றும் அதற்கு மேற்பட்ட சாதனங்களில் மட்டுமே இந்த அம்சம் செயல்பட உள்ள நிலையில், முதல்கட்டமாக இந்த மாதம் முதல் கூகுள் பிக்ஸல் செல்போன்களில் அறிமுகமாக உள்ளது.இந்த வசதியைப் பெற அழைப்பை அழைப்பவர், பெறுபவர் என இருவரின் செல்போன்களிலும் இந்த செயலி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.வாட்ஸ்ஆப் மெசேஜ்களை தவறவிடாமல் படிக்க... புதிய அம்சம் அறிமுகம்!A feature is available to identify scam calls using the 'Phone by Google' app.