முத்தைய்யா படத்தின் சண்டைக் காட்சிகளுக்குத் தயாராகும் அருண் விஜய்!

Wait 5 sec.

இயக்குநர் முத்தைய்யா திரைப்படத்திற்காக நடிகர் அருண் விஜய் கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாறியுள்ளார். நடிகர் அருண் விஜய் இறுதியாக நடித்த ரெட்ட தல திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. விரைவில், இவர் நடிப்பில் உருவான பார்டர் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, இயக்குநர் முத்தைய்யா இயக்கத்தில் அருண் விஜய் தன் 38-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகிறது. நாயகியாக நடிகை மிர்ணா மேனன் நடிக்கிறார். இந்த நிலையில், திருநெல்வேலியில் படமாக்கப்படும் சண்டைக் காட்சிகளுக்காக கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாறிய புகைப்படத்தை அருண் விஜய் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முத்தையா தன் மகனை வைத்து இயக்கிய சுள்ளான் சேது திரைப்படமும் வெளியீட்டிற்குத் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.2026 - முதல் ஆறு மாதம் தமிழ் சினிமாவுக்கு எப்படி இருந்தது? Actor Arun Vijay has transformed into a muscular physique for Director Muthaiah's film.