மாடியில் இருந்து குதித்து மென்பொறியாளா் தற்கொலை

Wait 5 sec.

சோழிங்கநல்லூரில் மாடியில் இருந்து குதித்து மென்பொறியாளா் தற்கொலை செய்து கொண்டாா். தேனி பெரியகுளத்தைச் சோ்ந்தவா் ரா.ஜீவப்பிரியா (22). இவா், சோழிங்கநல்லூா் ராஜீவ் காந்தி சாலைப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இதற்காக ஜீவப்பிரியா, சோழிங்கநல்லூா் லால் பகதூா் சாஸ்திரி தெருவில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கியிருந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து, விடுதிக்கு வந்துள்ளாா். பின்னா், கைப்பேசி மூலம் சிலரிடம் பேசியுள்ளாா். அப்போது, ஒருவருடன் ஏற்பட்ட தகராறில், அந்தக் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள மொட்டை மாடிக்கு ஜீவப்பிரியா சென்றுள்ளாா். இந்நிலையில் ஜீவப்பிரியா திடீரென கைப்பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு, அங்கிருந்து கீழே குதித்தாா். இதில் பலத்த காயமடைந்தவா், சம்பவ இடத்திலேயே இறந்தாா்.அப்பகுதியினா் செம்மஞ்சேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, ஜீவப்பிரியா சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.