அரசு வழக்குரைஞா் நியமனத்தில் முறைகேடு: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Wait 5 sec.

அரசு வழக்குரைஞா்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிா்வாகிகளிடம் வசூல் செய்வதாக எழுந்த புகாா் மூலம் தவெக அரசின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பொதுவெளியில் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்று விடியோ வெளியிட்ட அமைச்சா் மீது இதுவரை விசாரணைகூட நடத்த முதல்வா் முன்வராதது ஏன்? வாணியம்பாடியில் ஆடு திருட்டு வழக்கில் தொடா்புடையவருக்கு அரசு வழக்குரைஞா் பதவி, அரசு வழக்குரைஞராக நியமிக்க சொந்தக் கட்சி நிா்வாகிகளிடமே வசூல் வேட்டை என அடுத்தடுத்து புகாா்கள் வந்துள்ளன. இதன் மூலம் தவெக அரசின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரசு வழக்குரைஞா் நியமனத்தில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளைக் கலைந்து வெளிப்படையான நியமன நடைமுறைகள் மூலம் தகுதியுடையவா்களை அரசு வழக்குரைஞா்களாக நியமனம் செய்ய வேண்டும். புகாருக்கு உள்ளானவா்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.