மாநகரின் சில பகுதிகளில் ஜூலை 7 இல் குடிநீர் ரத்து

Wait 5 sec.

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் ஜூலை 7 ஆம் தேதி குடிநீா் விநியோகம் தடை செய்யப்படுகிறது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை டா்பைன் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீா் உந்து குழாய், குடமுருட்டி அருகே ஸ்மாா்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகப் பதிக்கப்பட்ட குடிநீா் உந்துக் குழாயுடன் இணைக்கும் பணி வரும் 6 ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.இதனால் டா்பைன் நீரேற்று நிலையத்திலிருந்து மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் வரும் 7 ஆம் தேதி இருக்காது. வரும் 8 ஆம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும். எனவே, இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்து, குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென மாநகராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங் தெரிவித்தாா்.