திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன் தலைமை வகித்தாா். மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாபு, கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் ராஜலட்சுமி, வருவாய் கோட்டாட்சியா்கள் சிவகுமாா் (வாணியம்பாடி), வரதராஜன் (திருப்பத்தூா்) மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.