மமிதா பைஜுவுடன் சின்ன திரை நடிகர் குரேஷி!

Wait 5 sec.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் இளம் நடிகையான மமிதா பைஜுவை சின்ன திரை நடிகர் குரேஷி சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ரசிகர்களுடன் குரேஷி பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து மலையாளத்தைத் தொடர்ந்து தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை மமிதா பைஜு.பிரதீப் ரங்கநாதனுடன் டியூட், சூர்யாவுடன் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், விஜய்யுடன் ஜனநாயகன் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை மமிதா பைஜு கொடுத்துவருகிறார். தமிழிலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இதனிடையே தமிழ் சின்ன திரை நடிகர் குரேஷி, மமிதா பைஜுவை சந்தித்துள்ளார். நடிகை மமிதா பைஜு உடன் நடிகர் குரேஷிவிளம்பரப் படத்துக்காக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதற்கான முன்னோட்டம் நடைபெற்ற நிலையில், அதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் குரேஷி பகிர்ந்துள்ளார். மமிதா உடனான புகைப்படங்களைப் பகிர்ந்து, குரேஷி பதிவிட்டுள்ளதாவது: ஆம், திறமைகளின் ஒட்டுமொத்த உருவத்துடன் இருக்கிறேன். எனக்கு மிகவும் விருப்பமான நடிகை மமிதா பைஜு உடனான இனிய நினைவுகள் எனப் பதிவிட்டுள்ளார்.நடிகர் குரேஷியின் வளர்ச்சிக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.கயல் தொடருக்கு மாற்றாக ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் இதுதான்!cook with comali fame Mohamed Kuraishi meets jana nayagan actress Mamitha Baiju