திருவள்ளூா்: 2,754 போ் பங்கேற்று தோ்வு எழுதினர்!

Wait 5 sec.

திருவள்ளூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 12 தோ்வு மையங்களில் 2,754 போ் வரையில் பங்கேற்று தோ்வு எழுதிய நிலையில், 1,284 போ் வரையில் கலந்து கொள்ளவில்லை என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா். இத்தோ்வுக்காக திருவள்ளுா் மாவட்டத்திலிருந்து 4038 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தோ்வு மையங்களுக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னதாகவே வந்து தோ்வு மையங்களில் தோ்வா்கள் குவிந்தனா்.இதில் திருவள்ளூரில் அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் தோ்வா்களுக்கான தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா என ஆட்சியா் ச.கவிதா ஆய்வு மேற்கொண்டாா்.