கந்திலி வாரச் சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்!

Wait 5 sec.

திருப்பத்தூா் அருகே கந்திலி வாரச்சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே கந்திலியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் சந்தை நடைபெறும். அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் ஏராளமான கோழிகள், ஆடுகள், மாடுகள் விற்பனைக்காக குவிந்தன. அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தா்மபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து போட்டி போட்டு வாங்கிச் சென்றனா். வாரச் சந்தையில் கோழிகள், ஆடுகள், மாடுகள், ரூ. 60 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.