இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) நாளை (அக். 2) மும்பையில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைகளில் 2 தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் சட்டவிரோதமான முறையில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதையடுத்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி ஏராளமான எதிர்க்கட்சிகள் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியை ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை (அக். 02) மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.இதுபற்றி, சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறுகையில், “ஞானேஷ் குமார் பதவி விலகும் வரையில் எங்களின் போராட்டம் தொடரும். கோவா, கர்நாடகம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படும். ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் அக்டோபர் மாதத்தின் இறுதியில் தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி தலைமையில் நடைபெற்ற போராட்டம் நாடு முழுவதும் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று மாபெரும் போராட்டமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சராகப் பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!Cockroach Janta Party will stage a protest in Mumbai tomorrow demanding the resignation of CEC Gyanesh Kumar.