திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு! - டோரதிக்கு விஜய் ஆண்டனி பாராட்டு!

Wait 5 sec.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படத்தை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பாராட்டியுள்ளார். நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோரின் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய புதிய படம் “டோரதி”. இப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது.இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், துணிச்சலான கதைகளத்தால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், டோரதி திரைப்படம், திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு எனக் கூறி நடிகர் விஜய் ஆண்டனி இன்று (அக். 01) தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “டோரதி மிக மிக சிறப்பான படம். திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு . இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!” எனக் கூறியுள்ளார்.பேசாததைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்... டோரதியைப் பாராட்டிய சூர்யா!Actor and music composer Vijay Antony has praised director Karthik Subbaraj's film "Dorothy".