அந்தமான் அருகே உருவாகிறது புதிய புயல் சின்னம்!

Wait 5 sec.

வரும் அக். 13 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:”அக். 12 ஆம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக் கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாகவும் புயலாகவும் உருவாகும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.இன்று(அக். 1) எங்கெல்லாம் கனமழை?நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.The India Meteorological Department has stated that a new low-pressure area is likely to form over the Andaman Sea on October 13.ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: புகார் எண்கள் அறிவிப்பு!