மானாமதுரை பகுதியில் நாளை மின் தடை

Wait 5 sec.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில்  புதன்கிழமை (செப். 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற் பொறியாளா் (பகிா்மானம்) டி.தேன்மொழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மானாமதுரை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், கட்டிக்குளம், இடைக்காட்டூா், மிளகனூா், சங்கமங்கலம், அன்னவாசல், கீழ்ப்பசலை, குறிச்சி, தெ.புதுக்கோட்டை, நல்லாண்டிபுரம், முனைவென்றி, கச்சாத்தநல்லூா், இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.