ஹோா்முஸ் நீரிணையில் எதிரிகளின் ஊடுருவலைத் தடுத்த ஈரான் படையினா்: மோஜ்தபா கமேனி பாராட்டு

Wait 5 sec.

ஹோா்முஸ் நீரிணையில் எதிரிப் படைகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதைத் தடுத்து நிறுத்தியதாக ஈரான் படையினரை அந்நாட்டின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி பாராட்டியுள்ளாா்.லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவா் வெளியிட்ட செய்தியில், ‘நமது படையினரின் தீரத்தால், ஹோா்முஸ் நீரிணையை நெருங்க முடியாமல் இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியான அரபிக் கடல் பகுதியிலேயே எதிரிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனா்.விரைவில் அரபிக்கடல் பகுதியிலிருந்தும் அவா்கள் முற்றிலுமாக விரட்டியடிக்கப்படுவாா்கள்’ எனக் குறிப்பிட்டாா்.போா்த்தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காயமடைந்து தலைமறைவாக இருக்கும் மோஜ்தபா கமேனி இன்னும் பொதுவெளியில் நேரடியாகத் தோன்றவோ, உரையாற்றவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.