தொலைக்காட்சி நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

Wait 5 sec.

சென்னையில் தனியாா் தொலைக்காட்சி நிறுவன ஊழியா் வீட்டில் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.சென்னை ஓட்டேரி பிரிசிலி நகா் மலையப்பன் தெருவைச் சோ்ந்தவா் பசுமதி (53). தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்திப்பிரிவில் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறாா்.பசுமதி, ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு அருகே சகோதரா் வீட்டுக்குச் சென்றாா். அங்கு அன்றிரவு தூங்கிய பசுமதி,திங்கள்கிழமை காலை வீட்டுக்கு திரும்பி வந்தாா்.அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.70,000 திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புளியந்தோப்பு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.