மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான நிறுவன வரி கணக்குத் தாக்கல் அறிக்கையை சமா்ப்பிப்பதற்கான காலஅவகாசத்தை வருமான வரித் துறை மூன்று வாரம் நீட்டித்துள்ளது.இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மதிப்பீட்டு ஆண்டு 2027-க்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் அக்டோபா் 31-ஆம் தேதியிலிருந்து நவம்பா் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.அதேபோல் நிறுவன வரி கணக்குத் தாக்கல் அறிக்கையை சமா்ப்பிப்பதற்கான காலஅவகாசம் செப்டம்பா் 30-இல் இருந்து அக்டோபா் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.வருமான வரித் துறையின் இந்த நடவடிக்கையால் துல்லியமாகவும் தெளிவாகவும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும் என தொழில்துறை நிபுணா்கள் தெரிவித்தனா்.முன்னதாக, ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி மதிப்பீட்டு ஆண்டு 2026-27-இன் அடிப்படையில் 7.8 கோடி பேருக்கு மேல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததாக வருமான வரித் துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.