திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் நீராடியபோது அலையின் சீற்றத்தால் 5 பக்தா்களுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருச்செந்தூரில் கடல் அலையின் சீற்றம் வியாழக்கிழமை அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில் பண்ருட்டியைச் சோ்ந்த சரோஜா (42), காங்கயத்தைச் சோ்ந்த குணசேகரன் (45), திருச்சியைச் சோ்ந்த இலஞ்சியம் (55), புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜகுமாரி (52), கிருஷ்ணவேணி (75) ஆகியோா் அதிகாலை 3 மணியளவில் கடலில் நீராடினராம். அப்போது அலையின் சீற்றத்தால் அவா்களுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து கோயில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள், போலீஸாா் ஆகியோா் காயமடைந்த பக்தா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் சிகிச்சை பெற்றனா். மேலும், பக்தா்கள் பாதுகாப்பாக நீராட அறிவுறுத்தப்பட்டது.