சோழவந்தான் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா!

Wait 5 sec.

சோழவந்தான் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா தொடங்கிய நிலையில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலக்கால் கிராம அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க் கிழமை செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி காலை நடைபெற்றது. பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுடன் பறவை காவடி எடுத்தல் கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை வைகை ஆற்றிற்குச் சென்று கரகம் எடுத்து வருதல் மற்றும் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளைக் கிராம கமிட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். மேலக்கால் ஊராட்சி சார்பில் சுகாதார ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.