சிதற விடலாமா... ஜெயிலர் - 2 பாடலில் நோரா ஃபதேகி!

Wait 5 sec.

நடிகை நோரா ஃபதேகி ஜெயிலர் - 2 திரைப்படத்தில் சிறப்பு நடனமாடியுள்ளார். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் அக். 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான, புரமோஷன்களும் திட்டமிட்டு வருகின்றன.இப்படத்தின் அனைத்து பாடல்களையும் இன்று (செப். 30) இசையமைப்பாளர் அனிருத் இசைக் கச்சேரி போல் நடத்தி வெளியிட உள்ளார். இத்திரைப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றிருப்பதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.Dance floors-ah sedhara vidalama?#Jailer2 Fourth Single #Bindaas drops today at 6 PM! @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial #NoraFatehi @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts… pic.twitter.com/Rkb9M3lGID— Sun Pictures (@sunpictures) September 30, 2026 இந்த நிலையில், பிந்தாஸ் என்கிற ஜெயிலர் - 2 பாடலில் நடிகை நோரா ஃபதேகி சிறப்பு நடனமாடியுள்ளதாகவும் இப்பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது, காவாலா பாடல் போன்று இருக்கலாம் என்றும் ஊகங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே, இப்படத்திற்காக நடிகை பூர்ணா நடனமாடிய அல்ல பொல்லேலோ பாடலும் குத்தாட்ட பாடலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினி சாருடன் நடிப்பதே மகிழ்ச்சியானது: சிவராஜ்குமார்Actress Nora Fatehi has performed a special dance in the movie Jailer 2.