பழ. நெடுமாறன் மகன் மறைவிற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ்நாடு மாநில உரிமைகளுக்காகவும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்தவருமான பழ.நெடுமாறன் அவர்களின் மகன், மாணிக்கம் நெடுமாறன் (57) ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் நேற்று (1.10.2026) காலை மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.புத்த மதத்தை தழுவி, புத்த மதத் துறவியாக வாழ்ந்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை எய்தி உள்ளார். அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அஞ்சலி செலுத்துகிறது.அவரை பிரிந்து வாடும் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது என கூறியுள்ளார்.Death of Pazha. Nedumaran's son; Communist Party of India offers condolencesமாநில நெடுஞ்சாலை வழிகாட்டிப் பலகைகளில் ஊர்ப்பெயர்களை இந்தியில் எழுதுவதா? - அன்புமணி கண்டனம்